Jan. 29, 2025, 3:59 p.m. Share it on WhatsApp
தென்காசி மாவட்டத்தில் L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் காணப்படும் கப்பல் கட்டுமான பணிக்கான வேலைக்கு ஆன்லைன் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. எலெக்ட்ரீசியன், வயர்மென் பிரிவில் சேர்ந்த மாணவர்கள், பாலிடெக்னிக் படித்த மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் பிரிவில் சேர்ந்த மாணவர்கள், மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் 30.01.2025 அன்று காலை 10.00 முதல் மாலை 3.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு சேரும் நபர்களுக்கு முதல் மூன்று மாதம் பயிற்சிக்காலத்திற்கு மாதம் ஊதியம் ரூ. 15,000/- வழங்கப்படும். அதற்கு பின் நிறுவன ஊதியம் ரூ. 18,000/- முதல் ஊதியமாக தரப்படும். சுமார் ரூ. 21,000/- ஊதியம் வரை வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04633-298088, 7603942550 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, தென்காசி.
Last Updated on Jan. 29, 2025, 3:59 p.m.
Do you like us? We help many business to growww. Let us talk!
Few of our projects...
👀 929