செய்திகள் சுற்றுலா Schools


valliyurmart.com வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளம்பரங்கள், வாங்குதல், சேவைகள், குடியிருப்பு மற்றும் பலவற்றுக்கான உங்கள் உள்ளூர் மையம்! ❀❀❀❀❀ Your Local Hub for Classifieds, Shopping, Services, Real Estate, and More in the Valliyur Surroundings!

Valliyur / News / id #18

செய்திகள்


பொது நிகழ்வுகள், வணிகம், விவசாயம் மற்றும் எந்த செய்தியானாலும் Kalakkad Mart-இல் செய்தியாக வெளியிடலாம்.

Create News

திருக்குறுங்குடி தெப்ப உத்ஸவம்

Feb. 5, 2025, 9 a.m. Share it on WhatsApp

👀 55 📍

திருக்குறுங்குடி 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தை திருமழிசைப்பிரான், ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வரும் மங்களா சாஸநம் செய்து உள்ளார்கள்.

திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக அவதரித்து தன்னைத்தானே பாடிக் கொள்கிறான். ஸ்ரீஸ்வாமி எம்பெருமானாரை அடிபணிந்து மந்திர உபதேசம் பெற்று திருப்பரியபட்டப் பாறையில் நின்றும் திருமண் காப்பு பெற்றுக்கொண்டார். அழகிய நம்பி பிரம்ம ராக்ஷஸனுக்கு கைசிக ஏகாதசியில் சாபம் நீங்க க்ரூபை செய்தான். மேலும் நம்பாடுவான் என்னும் பாணர் குலத்தில் பிறந்த பக்தன் கைசிக விருத்தாந்தம் அடியாக பெருமை பெற்றது இத்திருத்தலம். திருமங்கை மன்னன் வீடு பெற்ற பெருமை பெற்ற தலமும் இதுவே ஆகும்.

இத்திருத்தலத்தில் எம்பெருமான் நம்பி என்ற திருநாமத்துடன் ஐந்து க்ஷேத்திரங்களில் நின்று அருள்பாலிக்கிறான். திருக்குறுங்குடியில் நின்று, இருந்து, கிடந்த நிலையிலும் திருப்பாற்கடல் நதித்துறையில் நின்றும் மகேந்திரகிரி பர்வத மலையில் நின்றும் திருமலை நம்பி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்கள்.

இவ்வளவு பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள் இருவருக்கும் 28-ம் ஆண்டு தெப்ப உத்ஸவம் நாளது மங்களகரமான தை மாதம் 30-ம் தேதி மற்றும் மாசி மாதம் 01-ம் தேதி (12.02.2025 மற்றும் 13.02.2025) ஆகிய இருதினங்கள் நடைபெற இருக்கிறது.

மேற்கண்ட தெப்ப உத்ஸவங்களில் ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு கடந்த ஆண்டுகள் போல பரிபூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும், பொருளுதவியையும் வழங்கி எம்பெருமான் திருவருளுக்கு பாத்திரமாக வேணும். நின்ற வினையும் துயரும் கெட மாமலர் ஏந்தி சென்று பணிமின்! எழுமின்! தொழுமின்! தொண்டீர்காள் என அனைவரையும் ஆராவன்போடு அழைக்கிறோம்.

ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீஸ்ரீ பேரரருளாள இராமானுஜ ஜீயர்ஸ்வாமிகள் நியமனப்படி

M.பரமசிவன்

பவர் ஏஜெண்ட்

திருஜீயர்மடம், திருக்குறுங்குடி-627115

: 63809 12759

Email: thirujeermutthirukkurungudi@gmail.com

தெப்போத்ஸவ விழாவிற்கு பொருளுதவி, நன்கொடை வரவேற்கப்படுகின்றன.

திருக்குறுங்குடி கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 1276101013669

IFSC Code CNRB0001276 நம்பருக்கு காசோலை / கேட்பு / வரைவோலை அனுப்பலாம். மணியார்டர்கள் அனுப்புவோர்

பவர் ஏஜெண்ட், திருஜீயர்மடம், திருக்குறுங்குடி - 627 115

என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

திருக்குறுங்குடி தெப்ப உத்ஸவம்

Last Updated on Feb. 5, 2025, 9 a.m.

📲 WhatsApp Share




மேலும் படிக்க...

Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

Few of our projects...

Tharuvi.com an e-commerce Organic store built from scratch! visit the site.
kalakkadmart.com hyper-local classifieds website for kalakkad. visit the site.
southshopy.com a multi-brand e-commerce site from southern land visit the site.
macshopy.com reselling store for mac accessories visit the site.

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 933